Home உலகம் விமானத்தில் பயணித்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்,61 வயது தாத்தா!

விமானத்தில் பயணித்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்,61 வயது தாத்தா!

845
0
SHARE
Ad

united_states_of_america_airplane-2560x1600வாஷிங்டன், மார் 6 – அமெரிக்காவில் உள்ள படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங். இவருக்கு வயது 61. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டன் நகரில் இருந்து நீவார்க் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு அருகே ஜன்னலோர இருக்கையில் பெண் ஒருவர் வந்து அமர்ந்தார். தன்னை கட்டிபிடித்து முத்தமிட்டதாக இந்தியர் மீது அந்த பெண் காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில், இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே உறங்கிவிட்டேன். அப்போது யாரோ என்னை கட்டிப்பிடிப்பது போல் உணர்ந்தேன். கண்விழித்து பார்த்த போது  அருகில் இருந்த நபர் என்னை கட்டி பிடித்து முத்தமிட்டார். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பயந்து இருக்கையை விட்டு எழுந்து விமானத்தின் பின்புறத்திற்கு ஓடினேன்.

அங்கு விமான ஊழியர்களிடம் எனக்கு நடந்ததை தெரிவித்தேன் என்றார். விமானம் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் எப்பிஐ காவலர்களிடம் விரைந்து சென்று தெரிவித்தேன் அவர்கள் தேவேந்திர் சிங்கை கைது செய்தனர். அவரை நேற்று நியூஜெர்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது தேவேந்திர சிங் சிறையில் உள்ளார்.