Home கலை உலகம் லட்சுமிமேனன் குழந்தைபோன்றவர்- நடிகர் சித்தார்த்!

லட்சுமிமேனன் குழந்தைபோன்றவர்- நடிகர் சித்தார்த்!

756
0
SHARE
Ad

sidharthசென்னை, மார் 6 – சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ஜிகிர்தண்டா. பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குதிறார். எஸ்.கதிரேசன் தயாரிப்பு, சந்தோஷ் நாராயணன் இசை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சித்தார்த் பேசியதாவது, பீட்சா படத்தை பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தை நான்தான் தயாரிக்க நினைத்தேன்.

ஆனால் அப்படத்தில் நடிக்கத்தான் வாய்ப்புக்கிடைத்தது.  கதாநாயகி லட்சுமிமேனன் குழந்தைபோன்றவர். பதினொன்றாம் வகுப்பு படிப்பதாக கூறி மானத்தை மயக்குகிறார். படிப்பில் அவர் கொஞ்சம் திணறல் என்று நினைக்கிறேன். ஒன்றரை வருடமாக பதினொன்றாம் வகுப்பு படிப்பதாகவே கூறி வருகிறார்.

குழந்தைத்தனமாக இருந்தாலும் நடிப்பை பொறுத்தவரை சிறப்பாக செய்கிறார். இதுவரை அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றியடைந்தது. அதுபோல் இந்த படமும் வெற்றியடையும். சில இயக்குனர்கள் கேவலமாக கதை சொல்வார்கள். அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ்.

#TamilSchoolmychoice

ஒரு நல்ல கதையை எப்படி சொதப்பலாக சொல்ல முடியும் என்பதை அவரிடம் கதை கேட்டபோது தெரிந்தது. பின்னர் கதையை வாங்கி படித்தபோதுதான் கதையின் வலிமை புரிந்தது. நான் சுட்டிதமான கதாநாயகனாகத்தான் நடித்து வந்தேன் இந்த படத்தில் அது மாறிவிடும்.