Home இந்தியா ராஜீவ் கொலை வழக்கு- 7 பேர் விடுதலை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலை வழக்கு- 7 பேர் விடுதலை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

526
0
SHARE
Ad

SUPREME_COURT_8596fடெல்லி, மார் 6 – பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆயுட்கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கே அதிகாரம் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. தமிழக அரசின் மனுவுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

வழக்கு விசாரணையையும் மார்ச் 26-ஆம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ராம சுகந்தன் உள்ளிட்ட 6 பேரின் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் மனு மீது விசாரணை முடிந்த பின் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர். மார்ச் 26-ஆம் தேதி நடக்கும் விசாரணையின் போது யாரும் கால நீட்டிப்பு கோரக்கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.