Home நாடு MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!

MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!

460
0
SHARE
Ad

MH370 (2)மார்ச் 30 – சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கடலுக்கடியிலும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்களில் இருக்கும் கறுப்புப் பெட்டியைத் தேடும் விமானம் ஒன்றை ஏற்றிக் கொண்டு போர்க்கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள கடல் பகுதிக்குள் தற்போது சென்றுள்ளது.

பெர்த் நகரிலிருந்து புறப்பட்டு சுமார் 1,850 கிலோ மீட்டர் (1,150 மைல்) மேற்கு நோக்கி அந்த கப்பல் பயணம் செய்யும் என்றும் விமானம் காணாமல் போனதாக அடையாளம் காணப்படும் இடத்தை அடைய சில நாட்கள் பிடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியையும், பொருட்களையும் தேடும் ஆளில்லா சாதனம் ஒன்றையும் அந்தக் கப்பல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கடலில் மிதந்த சில பொருட்களை தேடுதலில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் மீட்டுள்ள வேளையில் அவை காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்டவையா என்பதைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

தேடுதலில் ஈடுபட்டிருந்த சீன போர் விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை சில பொருட்கள் கடலில் மிதந்ததைக் கண்டதாகவும், அவை காணாமல் போன விமானத்தின் வர்ணங்களை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் பத்து விமானங்கள் தேடுதலில் ஈடுபடும் என்றும் ஆஸ்திரேலியா கடல் பாதுகாப்பு இலாகா கூறியுள்ளது.

இதற்கிடையில் MH 370 குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட பயணிகளின் உறவினர்களைக் கொண்ட 29 பேர் கொண்ட குழுவினர் சீனாவிலிருந்து புறப்பட்டு இன்று கோலாலம்பூர் வந்தடைந்துள்ளதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.