Home இந்தியா பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!

பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!

602
0
SHARE
Ad

Jaswant Singh BJP 440 x 215மார்ச் 30 – கடந்த காலங்களில் பாரதீய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) ஆட்சியில் நிதி அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கும் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் (படம்) அந்தக் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும்பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தனது முடிவிலிருந்து மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டதால் அந்தக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

டார்ஜிலிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜஸ்வந்த்சிங், மக்களவைத் தேர்தலில் அவரது சொந்த ஊர் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலம்பார்மர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாரதிய ஜனதா மேலிடம் மறுத்துவிட்டது.அவருக்குப் பதிலாக காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாரதிய ஜனதாவில்இணைந்த சோனாராம் செளத்ரிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ஜஸ்வந்த் சிங், பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடுகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாரதிய ஜனதாவின் மற்ற மூத்ததலைவர்கள் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.

வேட்பு மனுவை வாபஸ் வாங்கப் போவதில்லை என்று ஜஸ்வந்த் சிங்அறிவித்தார். இந்த நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாகபோட்டியிடும் ஜஸ்வந்த் சிங்கை, பாரதிய ஜனதாவில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குநீக்கி அக்கட்சி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது