கோலாலம்பூர், மார்ச் 31 – பிரபல நோக்கியா நிறுவனம் தனது முதல் ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் கூடிய ‘நோக்கியா எக்ஸ்’ என்ற திறன்பேசியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.
மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திறன்பேசிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
4 அங்குல அகலத்தில், கெபாசிட்டிவ் தொடு திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திறன்பேசி, ஆண்டிராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
எனினும், திறன்பேசி முகப்பு (Homescreen) விண்டோஸ் 8 போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புற கேமராவுடன் இயங்குகிறது. நோக்கியா ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தொகுப்புகளை பதிவிறக்கும் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், வானொலி, 512 எம்.பி நினைவகம், 4 ஜிபி தகவல் சேமிப்புத் திறன், 32 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் விரிவாக்கம், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் எனப் பல வசதிகள் இயங்குகின்றன.இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது.
கருப்பு, வெள்ளை, சிகப்பு, இளஞ்சிகப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது குறிப்பிடதக்கது.
மலேசியாவில் நோக்கியா எக்ஸ் திறன்பேசியின் அதிகபட்ச விலை 400 ரிங்கிட் ஆகும்.