Home நாடு மலேசியாவில் ஜோயாலுக்காஸ் நகைக் கடை!

மலேசியாவில் ஜோயாலுக்காஸ் நகைக் கடை!

666
0
SHARE
Ad

DSC_0278கோலாலம்பூர், மார்ச் 31 – மத்திய கிழக்கு நகரான துபாயிலும், இந்தியாவின் முக்கிய நகர்களிலும் மிகப் பிரபலமாக விளங்கி வரும் ஜோயாலுக்காஸ் நகைக்கடை, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை மார்ச் 29ஆம் தேதி திறப்பு விழா கண்டது.

தங்களின் தங்க நகைகளின் பயன்பாட்டை மலேசிய மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற வணிக நோக்கத்தில் ஜோயாலுக்காஸ் குழுமம் மிகப் பெரிய நகைக்கடையை கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தற்போது  திறந்துள்ளது.

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரலமான நடிகர் மாதவன், மலேசியாவுக்கு வருகை தந்து இந்த நகை மாளிகையை அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார்.

#TamilSchoolmychoice

இந்த விழாவில் ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ், மற்றும் உள்நாட்டு வாணிப கூட்டுறவு மற்றும் பயனீட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசான் பின் மாலாக், மற்றும் மலேசிய ஜோயாலுக்காஸ் நகை காட்சியகத்தின் நிர்வாகி பிரான்சி ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்துகொண்டனர். இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.