அந்நிறுவனம் திறன்பேசிகள் மட்டும் அல்லாது இணையம் தொடர்பான கருவிகளையும், தொலைத்தொடர்பு சாதனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.
கடந்த ஆண்டு லாபத்தில் திறன்பேசிகளின் மூலமாக மட்டும் சுமார் 10% பயன் அடைந்துள்ளது. எனினும் சந்தையில், திறன்பேசிகளின் முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களைப் போன்ற நம்பகத்தன்மை இல்லை.
ஹவாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான NSA, ஹவாய் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும் அதன் தற்போதய நிர்வாக இயக்குனர் எரிக் சூ கூறியிருப்பதாவது:-
“இந்த ஆண்டில் (2014), ஹவாய் நிறுவனம் அதன் விற்பனைத்திறன் மூலமாக வர்த்தக மதிப்பை உயர்த்திக் கொள்ள இருக்கிறது, மேலும் திறன்பேசிகளின் பிரிவுகளை மத்திய மற்றும் உயர்மட்ட அளவிற்கு உயர்த்தி அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் NSA வின் குற்றச்சாட்டான, ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு இடையேயான தொடர்பு பற்றி பேசும் பொழுது, “எந்த ஒரு வணிக அமைப்பும் இதுபோன்ற விவேகமற்ற காரியங்களைச் செய்யாது” என்று எரிக் கூறியுள்ளார்.