பெல்ஜிங், ஏப்ரல் 1 – பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஆகியோரை கேலிச்சித்திரங்களாக வரைந்து பிரசுரித்தது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, முதலாம் உலகப்போரின் 100- ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, நாளை (புதன் கிழமை) பெல்ஜியத்தில் உள்ள பிளாண்டர்ஸ் புலம் (Flanders Field) நினைவு இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இந்நிலையில் அந்த பத்திரிக்கை, ஒபாமாவை கேலி செய்யும் விதமாக அவரையும் அவரது மனைவி மிச்செலையும் மனிதக்குரங்குகளாக சித்தரித்துள்ளன.
இதற்கு இன வெறியை தூண்டுவதாகக் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்புகளால், தனது செயல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்த பத்திரிக்கை, “அமெரிக்காவில் மரிஞ்சுனா என்ற போதை பொருள் விற்க ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார்.
அதை கேலி செய்யும் விதமாக இந்த சித்திரம் வரையப்பட்டது” எனத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே அதிபர் ஒபாமா நாளைய தினம் பெல்ஜியம் வர இருக்கிறார்.