Home உலகம் 2050-ல் உணவுப்பஞ்சம் – ஐநா தகவல்!

2050-ல் உணவுப்பஞ்சம் – ஐநா தகவல்!

678
0
SHARE
Ad

ammaammaஜெனிவா, ஏப்ரல் 1 – பூமியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களின் பதிப்புகளை மனிதர்கள் தற்சமயம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உறுதியான ஆதாரங்கள் காட்டுகின்றன. அத்தகைய பாதிப்புகள் மனிதனால் ஏற்கக்கூடியது தான் என்றாலும், வரும் காலங்களில் சமூகம் சார்ந்த மிகப் பெரிய நன் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பருவநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் கோரமான பாதிப்புகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என்று ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச நாடுகளின் ஒப்பந்தம்:

கடைசியாக 2007-ம் ஆண்டில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கைக்குப் பின்னர், தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அனைத்து நாடுகளும் கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை விரைவில் எட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நன்னீர் நிலைகளில் கடும் வறட்சி:

அடுத்த 20-30 ஆண்டுகளில் இயற்கையின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, ஆர்க்டிக் கடல் பனிப்பாறை பகுதிகளில் 2 செல்சியஸ் அதிகரிப்புடன் வெப்பநிலை உயரலாம். அதனால் கடல் மற்றும் நன்னீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என இந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது .

பருவநிலை தொடர்பான சர்வதேச குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சோரி இது குறித்து கூறியதாவது :-

“‘இந்த பூமியில் வாழும் எந்தவொரு மனிதரையும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

2050-ல் உணவுப்பஞ்சம்:

2050-ம் ஆண்டு சோளம், நெல், கோதுமை போன்ற உணவு பயிர்ச்செய்கைள் கடுமையாக பாதிக்கலாம். அதுமட்டுமன்றி, மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றான மீன்களும் நீரின் வெப்பம் தாளாமல் வேறு இடங்களுக்கு இடம்பெயரக்கூடும். குறிப்பாக, வெப்பமண்டல பிராந்தியங்கள் பலவற்றிலும் அன்டாட்டிகா பகுதியிலும் மீன்வளம் 50 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனித குலமும் மிகக் கடுமையான பருவநிலை பாதிப்புகளை சந்திக்கக் வேண்டிய நிலை ஏற்படும் என்பது தான் இந்த ஆய்வறிக்கையின் சுருக்கம்.