Home உலகம் பெலாரஸ், பின்லாந்து, பாலடிக் போன்ற மாகாணங்களையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்!

பெலாரஸ், பின்லாந்து, பாலடிக் போன்ற மாகாணங்களையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்!

498
0
SHARE
Ad

asia16ரஷ்யா, ஏப்ரல் 1 – உக்ரைனில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களை, தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ரஷ்யா, அதன் ஒரு பகுதியான   கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது தனது எல்லையை மேலும் விரிவுபடுத்த முயன்றுவரும் ரஷ்யா, பின்லாந்து, பெலாரஸ் போன்ற பகுதிகளைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு திட்டங்கள் பற்றி விளாடிமிர் புடினின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆன்ட்ரெஜ் இல்லா ரியோனோவ் சுவீடன் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

#TamilSchoolmychoice

கிரிமியாவுடன் ரஷ்ய அதிபர் புடினின் ஆக்கிரமிப்பு முடியபோவதில்லை. அவருக்கு தனது நாட்டின் எல்லையில் உள்ள பெலாரஸ், பின்லாந்து, பாலடிக் போன்ற மாகாணங்களையும் கைப்பற்றும் எண்ணம் உள்ளது. விரைவில் அங்கும் ரஷ்ய இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிப்பு செய்வார்.

ரஷ்யாவின் கடைசி பேரரசர் நிகோலஸ்–2 மற்றும் சோவியத் ரஷியாவின் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆகியோர் காலத்தில் இருந்தது போன்று மிகப்பெரிய நாடாக ரஷ்யா மாற வேண்டும் என்பது அவரது ஆசை” என்று அவர் தெரிவித்துள்ளார். ஆன்ட்ரெஜ் 2000 முதல் 2005–ம் ஆண்டு வரை புடினின் ஆலோசகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.