Home உலகம் சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

496
0
SHARE
Ad

Tsunami0204201401சாண்டிகோ, ஏப்ரல் 2 – சிலியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  8.2 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் அங்கு கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை.

நிலநடுக்கத்தினால் பெரு மற்றும் பொலுவியா பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சிலியின் வடக்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.