Home உலகம் ஆப்கானிஸ்தானில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைபடக்கலைஞர் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைபடக்கலைஞர் சுட்டுக்கொலை!

591
0
SHARE
Ad

20715bf1-e59d-4cbf-b666-832e739b2bf2_S_secvpfஆப்கானிஸ்தான், ஏப்ரல் 5 – ஆப்கானிஸ்தானில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர், மர்ம நபரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரின் மரணம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஜெர்மன் அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைபடக்கலைஞர் அஞ்சா நீட்டிர்ங், அமெரிக்காவின் (‘The Associated Press’) ‘தி அசோசியேட்டடு பிரஷ்’ எனும் பிரபல பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

இன்று (சனி) ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான தகவல் சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காவல் துறை சீறுடை அணிந்த மர்மநபர் துப்பக்கியால், கண் மூடித்தனமாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். உடன் இருந்த சக பெண் நிருபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய அந்த நபர் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பார் என நம்பப்படுகிறது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி, காபூலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.