Home கலை உலகம் அஜீத் படத்தில் வில்லனா? அரவிந்த்சாமி ஆவேசம்!

அஜீத் படத்தில் வில்லனா? அரவிந்த்சாமி ஆவேசம்!

529
0
SHARE
Ad

ajithசென்னை, ஏப்ரல் 5 – நான் அஜீத் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றார் அரவிந்த்சாமி.தளபதி, தாலாட்டு, மறுபடியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அரவிந்த்சாமி. சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

மீண்டும் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படம் மூலம் நடிக்க வந்தார். அதன்பிறகு புதிய படங்களை ஏற்காமல் இருந்துவந்தார்.

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் பரவிவருகிறது.

#TamilSchoolmychoice

இதையறிந்து அரவிந்த்சாமி, நான் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். மேலும், நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக முட்டாள்தனமாக யாரோ வதந்தி கிளப்பி விடுகிறார்கள்.

வில்லன் வேடத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான் ஏற்கும் வேடம் குறித்து எனது டுவிட்டர் பக்கத்தில் நானே வெளியிடும்வரை அதுபற்றி யாரும் நம்ப வேண்டாம் என்று கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.