ரஷ்யா, ஏப்ரல் 5 – ரஷ்யாவில் இயங்கிவரும் அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து ‘மெக்டொனால்டு’ (Mc Donald) உணவகங்கள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு ரஷ்யாவின் LDPR கட்சியின் தலைவர் விளாடிமிர் ஸிரினோவ்ஸ்கி அளித்துள்ள பேட்டியில், ரஷ்யாவில் இயங்கிவரும் அனைத்து ‘மெக்டொனால்டு’ (Mc Donald) உணவகங்களையும் மூடப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக பெப்சி நிறுவனத்துடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மெக்டொனால்டு நிறுவனம் கிரிமியாவில் இயங்கி வந்த தன் மூன்று கிளைகளை மூடியது. அந்த உணவகங்களின் செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை என்ற அந்நிறுவனத்தின் தரப்பில் காரணம் கூறப்பட்டாலும்,
கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதன், எதிரொலியாகவே அக்கிளைகள் மூடப்பட்டதாக தகவல்கள் கசிகின்றது. இதன் காரணமாகத் தான் விளாடிமிர் ஸிரினோவ்ஸ்கி தங்கள் நாட்டில் உள்ள அனைத்து மெக்டொனால்டு உணவகங்களை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.