Home இந்தியா யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் அடிக்கவில்லை – நக்மா!

யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் அடிக்கவில்லை – நக்மா!

711
0
SHARE
Ad

1395992255-7769சென்னை, ஏப்ரல் 5 – யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என மீரட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது நடிகை நக்மாவின் கன்னத்தில் மீரட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முத்தமிட முயற்சித்தார். அவரை தள்ளிவிட்டு நக்மா கோபமாக சென்றார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

#TamilSchoolmychoice

இதன் பின்னர் மற்றொரு சமயம் தன்னை கட்டிப்பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரை நக்மா கன்னத்தில் அறைந்தார். இதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதை தொடர்ந்து நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தன்னை யாரும் முத்தமிடவில்லை என்றும் யாரையும் தான் கன்னத்தில் அறையவில்லை என்றும் நக்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், என்னை முத்தமிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்னை மகளாக நடத்தினார்.

அவர் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதனை பத்திரிக்கையாலர்கள் தவறாக புரிந்து கொண்டன. அதே போல் யாரையும் நான் கன்னத்தில் அறையவும் இல்லை. மீரட்டுக்கு செல்ல மாட்டேன் என எந்த சமயத்திலும் கூறவும் இல்லை என்றார் நக்மா.