சிரியா, ஏப்ரல் 5 – சிரியாவில் நடந்த உள் நாட்டு கிளர்ச்சியின் போது, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-ஆசாத், கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவத்தைக் கொண்டு விஷவாயு நிரப்பப்பட்ட குண்டுகளை வீசச் செய்து தாக்குதல் நடத்தினார்.
இதனால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததுள்ளனர் எனப் புகார் எழுந்துள்ளது. சிரியாவில், அந்நாட்டு அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள், கடந்த 3 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை 1,50,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இருந்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் ஜோபார் பகுதியில் ராணுவம் விஷ வாயு தாக்குதல் நடத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிப்பது போன்ற புகைப்படங்களை கிளர்ச்சியாளர்கள் யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு சிரியா அரசு, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி–மூன் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பிற்கு கடிதம் அனுப்யுள்ளது.
அதில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாக்குதல் சம்பவம் குறித்து குழப்பம் நீடிக்கிறது.