Home உலகம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டது!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டது!

454
0
SHARE
Ad

f045f741-46f0-41e2-b61e-809c93f098dfஇஸ்லாமாபாத், ஏப்ரல் 7 – ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையொட்டி, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை இன்று மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் மற்றும் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி, இதுவரை தொடர்ந்து 2 முறை அதிபராக இருந்த ஹமித் கார்சாய் இந்த முறை தேர்தலில் கலந்து கொள்ள முடியாது. இந்நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து தேர்தலை அமைதியாக நடத்த அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 இலட்சம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையான சாமனிலுள்ள ஃபிரெண்ட்ஷிப் கேட்  இன்று மூடப்பட்டது.

இதனால், இருநாட்டு எல்லைகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. எல்லைப்பகுதி மூடப்பட்டதால் இருநாடுகளைச் சார்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.