Home இந்தியா காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தில் களமிறங்கிய கார்த்திக்!

காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தில் களமிறங்கிய கார்த்திக்!

581
0
SHARE
Ad

0சென்னை, ஏப்ரல் 7 – நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது, நாடாளும் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ், ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்தனர்.

அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வரவேற்றார். அவரிடம், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பிரசாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, நடிகர் கார்த்திக் நிரூபர்களிடம் கூறியதாவது, வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தேர்தல், சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான காலம்.

நாடு நன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். இதை வேறு கட்சிகளால் செய்ய முடியாது.

நாங்கள் தேர்தலில் தனியாக நிற்க முடியும். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கு சமஉரிமை, சீனாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சி என்று இந்தியா சாதித்துக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் அறிவுப்பூர்வமான ஆட்சிதான் காரணம்.

நான் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, கோவிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. இந்த கோவிலைவிட்டு வெளியே போகமாட்டேன்.

வேறு கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் என்னுடன் விவாதம் நடத்தலாம் என்றும் நாட்டின் நலன் கருதி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற உறுதி ஏற்போம் எனவும் கூறியுள்ளார்.