Home கலை உலகம் சென்னைக்கு வருகிறது விஜய்யின் கத்தி!

சென்னைக்கு வருகிறது விஜய்யின் கத்தி!

700
0
SHARE
Ad

75dd45d39ef9d0753ecd2fa822e54796சென்னை, ஏப்ரல் 7 – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடித்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படக்குழுவினர் தற்போது ஹைதராபாத்தில் ஒரு பாடலை எடுத்து முடித்து விட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனராம்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை படத்தின் 30% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். மேலும் கத்தி படத்தின் புகைப்படங்கள் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா சென்னை, ஐதராபாத், ராஜமுந்திரி என பெரிய நகரங்களை குறி வைத்தே கத்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு திரையிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.