Home உலகம் வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ள ஜப்பானுக்கு அமெரிக்க ஆதரவு!

வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ள ஜப்பானுக்கு அமெரிக்க ஆதரவு!

583
0
SHARE
Ad

india-japan-usa-flagவடகொரியா, ஏப்ரல் 7 – வடகொரியா, மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாய் நிலவி வரும் பிரச்சனையில், இரு நாடுகளும் ஒத்திகை என்ற பெயரில் ஏவுகணைகளை வீசி, தங்கள் ஆயுத பலங்களைக் காட்டிவருகின்றன.

இதன் உச்சமாக வடகொரியா அணு ஆயுத சோதனையும் நடத்தி வருகிறது. இவ்விரு நாடுகளும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்பதனால், ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர் சக்ஹெகல், ஆசிய பசிபிக் நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஜப்பான் சென்ற அவர், தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் சுனோரி ஒனோடெராவை சந்தித்து பேசினார்.

#TamilSchoolmychoice

அப்போது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சக்ஹெகல் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது,

வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்க, ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்க துணை நிற்கும். வரும் 2017-ஆம் ஆண்டு, ஏவுகணைகளை தாக்கி அளிக்கக்கூடிய 2 போர்க்கப்பல்களை ஜப்பானுக்கு, அமெரிக்கா வழங்க இருக்கிறது.

இக்கப்பல்களில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கருவி உள்ளது. அது சிறிய மற்றும் பெரிய ஏவுகணைகளையும் வழிமறித்து மோதி அழிக்கும் திறன் கொண்டது” என்று கூறினார். ஏற்கனவே இதுபோன்ற 5 போர்க்கப்பல்களை ஜப்பானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது கூடுதல் தகவலாகும்.