Home தொழில் நுட்பம் சாம்சங் மலிவான விளம்பரம் தேடுகிறது – அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு!

சாம்சங் மலிவான விளம்பரம் தேடுகிறது – அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு!

497
0
SHARE
Ad

Obamaவாஷிங்டன், ஏப்ரல் 7 – சாம்சங் நிறுவனம் தங்களின் சுய விளம்பரத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பேஸ்பால் உலகத்தொடரில் வெற்றி பெற்றதற்காக அமெரிக்காவின் Bostan RedSox அணியை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த வாரம் சந்தித்தார். அப்போது அந்த அணியின் டேவிட் ஓர்டிஸ் என்ற வீரர், ஒபாமாவுடன் சேர்ந்து தன் சாம்சங் திறன்பேசில் உள்ள செல்ஃபி (Selfie) வசதியின் மூலம், புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதனை ‘ட்விட்டர்’ (Twitter) ல் அவர் பகிர்துள்ளர். அவரைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தனது 5.3 மில்லியன் பின்பற்றாளர்களுக்கு அதனைப் பகிர்ந்துள்ளது. இதில் குறிப்பிடப்படும் விஷயம் என்னவென்றால்,  டேவிட் ஓர்டிஸ் சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அதிபரின் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், “வெள்ளை மாளிகை நிபந்தனைகளின் படி அமெரிக்க அதிபரை, எந்த ஒரு தொழில் சார்ந்த விளம்பரங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் சாம்சங் நிறுவனம், தங்கள் சுய விளம்பரத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ஓர்டிஸ் மூலமாக பயன்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டுகின்றன.

இதனால் வெள்ளை மாளிகையில் செல்ஃபிக்கு தடைவிதிக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.