இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 422 விடுதலைப் புலிகள் இருப்பதாகவும், அவற்றில் 32 பேர் இந்தியாவில் வசித்து வருவதாகவும் கடந்த மார்ச் 21-ஆம் தேதி வெளியான இலங்கை அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் விடுதலைப் புலிகளில் 6 பேரின் முகவரி அந்த அரசிதழில் உள்ளது. மற்ற விடுதலைப் புலிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க்,
பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நதர்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் அரசிதழில் குறிப்பிட்டுள்ள 422 விடுதலைப் புலிகளும் ஏற்கெனவே சர்வதேச போலீசால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இலங்கை அரசின் உளவுத்துறை தலைவர் கபில் ஹெண்டவிதராணா, கூறுகையில், இலங்கை அரசின் பட்டியலில் உள்ள அனைவரும் தீவிரவாதத்துக்கு நிதி அளித்து வருகிறார்கள் என்றார்.
இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தற்போது இந்த 422 பேரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் படி அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.