Home தொழில் நுட்பம் மலேசியாவில் அதிகரித்து வரும் இணையப் போக்குவரத்து!

மலேசியாவில் அதிகரித்து வரும் இணையப் போக்குவரத்து!

627
0
SHARE
Ad

FBகோலாலம்பூர், ஏப்ரல் 8 – மலேசியாவில் இணையப் போக்குவரத்து மற்றும் பயன்பாடுகள் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக MyIX (Malaysian Internet Exchange) அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 2012-ல் 230,631 Mbps ஆக இருந்த இணைய வரத்து, 2013-ஆம் ஆண்டு 349, 227 Mbps ஆக அதிகரித்துள்ளது. இது முன்னைக் காட்டிலும் 51% அதிகமாகும்.

கடந்த 2012-ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது, 2013 ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் 75%-80% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து MyIX ன் தலைவர் சியூவ் கோக் ஹின் கூறுகையில், “மலேசியாவில் இணையத்தின் இந்த திடீர் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக அதிகம். நட்பு ஊடகங்களான ‘பேஸ்புக்’ (f ace book) , ‘ட்விட்டர்’ (twitter), ‘வாட்ஸ் அப்’ (whatsapp) போன்றவற்றினை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் அரசு, 21-30 வயதுள்ள இளைஞர்களுக்காக தகவல் தொடர்புத் தொகுப்பின் மூலமாக RM200 வரை திறன்பேசிகளுக்கு தள்ளுபடி செய்கின்றது. அதுமட்டுமில்லாமல் RM600 என்ற அளவில் மலிவான விலை கொண்ட திறன்பேசிகளை உருவாக்குமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கின்றது” என்று கூறியுள்ளார்.

முன்பைக் காட்டிலும் மலேசியாவில் இணையத்தின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் தகவலாகும்.