Home கலை உலகம் விசாகா விலா எலும்பு முறிவு – உதவி இயக்குனர் தள்ளிவிட்டதால்!

விசாகா விலா எலும்பு முறிவு – உதவி இயக்குனர் தள்ளிவிட்டதால்!

787
0
SHARE
Ad

Actress Vishakha Singh in Kanna Laddu Thinna Aasaiya Latest Stillsசென்னை, ஏப்ரல் 8 – நடுரோட்டில் வேகமாக விசாகாவை உதவி இயக்குனர் தள்ளிவிட்டதால் அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நாயகி விசாகா சிங் நடிக்கும் டோலிவுட் படம் ரவுடி ஃபெலோ. நாரா ரோஹித் நாயகன்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பீமாவரம் பகுதியில் ஒரு சாலையில் நடந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் விசாகா சிங்கை, உதவி இயக்குனர் ஒருவர் நடுரோட்டில் வேகமாக தள்ளிவிட்டதால் அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி விசாகா சிங் கூறியதாவது, படப்பிடிப்பு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. ஒத்திகையின்போது சுழன்றபடி ஓடும் காட்சியில் நன்றாக நடித்தேன். டேக் எடுப்பதற்காக இயக்குனர் நடிக்க சொன்னார்.

#TamilSchoolmychoice

நான் சுழன்றபடி ஓட தயாரானபோது அருகில் இருந்த உதவி இயக்குனர் என்னை வேகமாக தள்ளிவிட்டார். இதில் நான் தவறி ரோட்டில் விழுந்தேன். வலி தாங்க முடியாமல் கதறினேன். அதிர்ச்சியடைந்த பட குழுவினர் ஓடிவந்து என்னை மீட்டனர்.

வலியால் துடித்த என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அதுவரை எனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரியாது. என்னை பரிசோதித்த மருத்துவர் விலாவில் முறிவு ஏற்பட்டது பற்றி சொன்னபோது அதிச்சியடைந்தேன்.

2 வாரம் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். காயம் ஆற 4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர் கூறியபோது கண்கலங்கிவிட்டேன். நான் அந்த காட்சியில் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காகவே உதவி இயக்குனர் தள்ளிவிட்டார்.

அது இதுபோல் ஆகிவிட்டது. படப்பிடிப்பு முடித்தவுடன் நான் சிகிச்சைக்காக லண்டன் போக இருந்தேன். இப்போது பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது.