Home கலை உலகம் பேஸ்புக் பக்கத்தில் ஆபாசக் கருத்து: நடிகை விஷாகாவின் பதிலுக்குத் திரிஷா ஆதரவு!

பேஸ்புக் பக்கத்தில் ஆபாசக் கருத்து: நடிகை விஷாகாவின் பதிலுக்குத் திரிஷா ஆதரவு!

969
0
SHARE
Ad

vishagaசென்னை, ஜூன் 11 – `கண்ணா லட்டு தின்ன ஆசையா` உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியான நடிகை விஷாகா, தனது  பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாகப் பதிவிட்ட ஒருவருக்குக் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

அவரின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நடிகை  திரிஷா,  விஷகாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை விஷாகா சிங் அவருடைய பேஸ்புக் பக்கத்தில், வெள்ளை நிற ஆடை (டி.ஷர்ட்) அணிந்த படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் (Everybody is somebody’s foreigner)  என்கிற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.  இதைப் பார்த்த ஒரு நபர்  மிக மோசமான, ஆபாசமான கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை விஷாகா சிங், ஆபாசமாக கருத்தைப் பதிவிட்ட நபருக்குக் காட்டமாகப் பதிலடி கொடுத்திருந்தார்.

இது குறித்து நடிகை விஷாகா பதிலளித்ததாவது: ” நான் பெண் என்று எனக்குத் தெரியும். பொது அறிவு இருக்கா? உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை , தோழிகளுக்கு இருப்பது போலத்தான் எனக்கும் உள்ளது”.

vishaga,“இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி  ஆபாசமாகப் பேச முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன்”.

“தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்”  என்று பதிவிட்டார்.

பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கருத்துக்களையும் விஷாகா  நீக்கிவிட்டார். தேவையில்லாத விமர்சனங்கள் உருவாகும் என்பதால் அந்தப் பதிவை  நீக்கிவிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் விஷாகாவின் துணிச்சலான பதிலைப் பாராட்டியுள்ள நடிகை திரிஷா, “இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அற்புதம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது” என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.