Home உலகம் “எங்களை மியான்மர் என நினைத்து விடாதீர்கள்” – இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பதிலடி!

“எங்களை மியான்மர் என நினைத்து விடாதீர்கள்” – இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பதிலடி!

565
0
SHARE
Ad

pakistanஇஸ்லாமாபாத், ஜூன் 11 – இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீது மியான்மருக்குள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகளை, இந்திய இராணுவம் நேற்று அந்நாட்டிற்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தது. இதுபோன்ற தாக்குதல் பாகிஸ்தானிலும் நடக்கலாம் என இந்தியா சூசகமாகத் தெரிவித்து இருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம், “அதிரடியாகப் புகுந்து  தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் ஒன்றும் மியான்மர் அல்ல” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறுகையில், “இந்தியா தவறுதலாக மியான்மர் என நினைத்து பாகிஸ்தானிற்குள் புகுந்து விடக் கூடாது. அத்தகைய கனவுகள் இருந்தால் கலைத்துவிடுங்கள்.ஏனெனில் எத்தகைய வெளிநாட்டுப் படைகளுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் எந்நேரமும் தயாராக உள்ளோம்”

மேலும் அவர், “இது போன்ற விவகாரங்களில் இந்தியா கடந்த காலங்களில் பெயர் பெற்று இருக்கலாம், ஆனால் இனி அதுபோல் நடக்க வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.