Home உலகம் இலங்கை அரசாங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் அப்துல் கலாம்!

இலங்கை அரசாங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் அப்துல் கலாம்!

687
0
SHARE
Ad

abdual-kalam-champikaகொழும்பு, ஜூன் 11 – இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு செல்லவுள்ளார்.

வலு மற்றும் சக்தி வளங்கள் தொடர்பான கருத்தரங்கு வரும் ஜூன் 26, 27-ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்பு விருந்திராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

புதுடெல்லியில் அப்துல் கலாமை, இலங்கையின் சக்தி, மின் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 8-ஆம் தேதி சந்தித்து, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அப்துல் கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.