Home இந்தியா மேகி நூடுல்சில் இரசாயன நச்சுத்தன்மை இல்லை – கர்நாடக ஆய்வில் தகவல்!

மேகி நூடுல்சில் இரசாயன நச்சுத்தன்மை இல்லை – கர்நாடக ஆய்வில் தகவல்!

562
0
SHARE
Ad

maggiபெங்களூர், ஜூன் 11 – மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை இல்லை என்று கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

“மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை உள்ளதாகச் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ‘மேகி நூடுல்ஸ்’ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் மாதிரியை எடுத்து மைசூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது”.

#TamilSchoolmychoice

“அங்கு சில தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி மேகி நூடுல்சை ஆய்வு செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து மேகி நூடுல்சின் மாதிரி பெங்களூரு பீன்யாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது”.

“இந்த ஆய்வின் முடிவில் மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. அது அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம்”.

“அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும். அதுவரையில் கர்நாடகத்தில் மேகி நூடுல்சுக்குத் தடை நீடிக்கும்” எனக் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் கூறினார்.