Home வணிகம்/தொழில் நுட்பம் டில்லி, மும்பைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமான சேவை!

டில்லி, மும்பைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமான சேவை!

563
0
SHARE
Ad

Singapore-Airlines-A380 (1)புதுடில்லி, ஏப்ரல் 9 – வரும் மே மாதம் 30 – ம் தேதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உலகின் மிகப் பெரிய விமானமான A380 இந்தியாவின் புதுடில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு தனது சேவையைத் தொடங்கவுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வியாபாரத் திட்டமிடுதல் பிரிவின் துணைத் தலைவர் லீ வென் பென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர்பஸ் A380 இந்தியாவிற்கு தனது சேவையைத் தொடங்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

A380 என்ற ஜம்போ ஜெட் ரக விமானம் தினமும் இந்தியாவின் மும்பை மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்களுக்கு வரும் மே மாதம் 30 ஆம் தேதியில் இருந்து சேவையைத் தொடங்குகின்றது.

#TamilSchoolmychoice

வாரத்திற்கு 14 விமானங்கள் டில்லி மற்றும் மும்பை நகருக்கு பறக்கவுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு இந்தியா ஒரு மிக முக்கியமான சந்தை என்றும், இந்த சேவை தொடங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வசதியான ஒரு பயணத்தை உலகின் மிகப் பெரிய விமானத்தின் மூலம் பெறுவார்கள் என்றும் லீ வென் பென் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கிடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் A380 விமானத்தை இயக்கியது. இந்த ரக விமான சேவையை தொடங்கியது உலகில் அதுவே முதல் முறையாகும்.

இந்த சூப்பர் ஜம்போ ரக விமானம் தற்போது பிராங்க்பர்ட், ஹாங் காங், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், மெல்பர்ன், நியூயார்க், பாரிஸ், ஷாங்காய், டோக்கியோ நாரிட்டா மற்றும் ஸூரிச் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.