Home கலை உலகம் விஜய் படத்திற்கு பின்னால் ராஜபக்சே?

விஜய் படத்திற்கு பின்னால் ராஜபக்சே?

506
0
SHARE
Ad

0சென்னை, ஏப்ரல் 9 – ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நடிகர் விஜயும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘கத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதிக பொருள் செலவில் பிரம்மாண்ட படமாக உருவாகும் இப்படத்தை, ஐங்கரன் இண்டேர்நேஷனல் மற்றும் லைகா மொபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. கொல்கத்தா உள்ளிட பல நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு எதிராக சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா மொபைல்ஸ் நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வியாபாரா நோக்கில் தொடர்பு வைத்துள்ளதாம். எனவே, இப்படத்தை தயாரிப்பதிலும் ராஜபக்சே இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில், இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#TamilSchoolmychoice

சமீபத்தில் வெளியான இனம் படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததால், அப்படம் திரையிடுவது தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.