Home இந்தியா நாம் தமிழர் கட்சிக்கு செல்வாரா வடிவேலு?

நாம் தமிழர் கட்சிக்கு செல்வாரா வடிவேலு?

593
0
SHARE
Ad

seemanசென்னை, ஏப்ரல் 9 – அ.தி.மு.க.வின் கோபத்துக்கு ஆளானதால் திரைப்படத்துறையினரால் கைவிடப்பட்டார் வடிவேலு. தற்போது அவர் நடித்த தெனாலிராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்புகள் வடிவேலுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 5-ஆம் தேதி சனிக்கிழமை வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடப்போவதாக புறப்பட்டு வந்த ஒரு தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலரை, வழியிலேயே கைது செய்தனர் காவல்துறையினர்.

தெலுங்கு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, சாலிகிராமத்தில் பத்மாவதி நகரில் உள்ள வடிவேலுவின் புதுவீடு, வேதவள்ளி தெருவில் இருக்கும் அவரது அலுவலகம், மற்றும் அவர் ஏற்கனவே குடியிருந்த லோகையா காலனியில் உள்ள பழைய வீடு ஆகி மூன்று இடங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

தெலுங்கு அமைப்பினர் கைது செய்யப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே வடிவேலுவின் இருப்பிடங்களில் போடப்பட்டிருந்த காவலர்கள் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

அதனால் அதிர்ச்சியடைந்தார் வடிவேலு. இவ்விஷயத்தை அறிந்து தன் ஆட்களை வடிவேலுவுக்கு பாதுகாப்பு கொடுக்க அனுப்பி வைத்தார் சீமான். அதுமட்டுமல்லாமல், வடிவேலுவை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை எச்சரிக்கும் வகையில் காரசாரமான அறிக்கை ஒன்றையும் நேற்று வெளியிட்டிருக்கிறார் சீமான்.

கட்சி தொடங்குவதற்கு முன் சில படங்களை இயக்கியபோது சீமானும், வடிவேலுவும் பங்காளி பங்காளி என்று பாசத்தைப் பொழிந்து கொள்வார்கள். அந்த பாசத்தின் காரணமாகவே தற்போது வடிவேலுவுக்கு ஆதரவாக சீமான் களமிறங்கி இருக்கிறார்.

அதேசமயம், இக்கட்டான நேரத்தில் வடிவேலுவுக்கு கைகொடுத்ததன் பின்னணியில் சீமானுக்கு ஒரு திட்டமும் இருக்கிறது என்கிறார்கள் திரைத்துறையினர்.

வடிவேலுவை எப்படியாவது நாம் தமிழர் கட்சியில் இணைத்துவிட வேண்டும் என்பதே சீமானின் திட்டமாம். அதை மனதில் கொண்டே வடிவேலுவுக்கு ஆதரவு என்ற வலையை விரித்திருக்கிறாராம் சீமான்.