Home நாடு தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி முறையாக சேர்கின்றதா? – சுரேந்திரன் கேள்வி

தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி முறையாக சேர்கின்றதா? – சுரேந்திரன் கேள்வி

780
0
SHARE
Ad

n-surendranகோலாலம்பூர், ஏப். 9- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கிய வெ 56 கோடி என்ன ஆனது என்றும் அத்தொகை முறையாக தமிழ்ப்பள்ளிக்கு சேர்கின்றதா? என்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2009-2013 ஆம் ஆண்டிற்கான தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காக பிரதமர் வழங்கியுள்ள வெ.56 கோடி என்ன ஆனது என்று அண்மையில் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக கெ அடிலான் தேசிய உதவித் தலைவர் சுரேந்திரன் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும் மஇகா இதுவரை இது தொடர்பாக எந்த பதிலும் கூறவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

“தமிழ்ப் பள்ளிகளுக்கு இத்தனை கோடி ஒதுக்கியுள்ளோம் என அரசாங்கம் அவ்வப்போது அறிவித்து வருகின்றது. ஆனால் ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முறையாக தமிழ்ப்பள்ளிகளை சென்று சேர்கிறதா என்பது தான் தற்போதைய மிகப் பெரிய கேள்வியாகும்” என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.

இதனிடையே, தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கிய 56 கோடி வெள்ளியின் நிலை குறித்து பிரதமரே கேள்வி  எழுப்பி இருப்பதால் மஇகாவும் அப்பணம் குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளது. இந்த பண விவகாரம் குறித்து மஇகா பதில் கூறியே ஆக வேண்டும் என்றும் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.