Home இந்தியா பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது – வைகோ!

பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது – வைகோ!

502
0
SHARE
Ad

5-21-2011-7-no-one-defeat-mdmk-vaikoசென்னை, ஏப்ரல்  9 – தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும், அந்த போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பல்வேறு காரணங்களை கூறி தடை ஏற்படுத்திடும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம் அதை வன்மையாக கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.

வளர்ந்து செழித்த ஐரோப்பா கண்டத்தின் ஸ்பெயின் நாட்டில் இன்றும் மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பலரும் காயம் அடைகின்றனர். உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனாலும் அந்த வீர விளையாட்டு தொடர்கிறது.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண உலக நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் கண்போல் பாதுகாத்து வருகின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போருக்கு காயம் ஏற்படுவதை காரணம் காட்டி தடை செய்வது அறிவீனம் ஆகும்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது. மதுரை மாவட்டத்தில், கரடிக்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என இந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.