Home நாடு துணிவு இருந்தால் என்னை அறையட்டும்- சாஹிட் ஹமிடி

துணிவு இருந்தால் என்னை அறையட்டும்- சாஹிட் ஹமிடி

654
0
SHARE
Ad

ahmad zahidகோலாலம்பூர், ஏப்ரல் 9 – உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடியின் கன்னத்தில் அறைந்தால் 500 ரிங்கிட் தருவதாக முன்னாள் சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ யோங் தெக் லீ அண்மையில் அறிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ள சாஹிட், “யோங் தெக் துணிவு இருந்தால் என்னை அறைந்து 501 ரிங்கிட் பெற்றுச் செல்லுட்டும். என்னைஅறையச் சொல்வதற்கு மற்ற யாரையும் தேடத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2 – ம் தேதி சபா மாநிலத்தில் இருவரை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவத்தை குறிப்பிட்டு விமர்சித்த தெக் லீ, சாஹிட்டை கன்னத்தில் அறைந்தால் அந்த சன்மானத்தை கொடுக்க முன் வந்தார்.

#TamilSchoolmychoice

2 மாதங்களுக்கு முன்பு செபுத்தே எம்.பியான திரேசா கோக் என்பவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் திரேசா கன்னத்தில் அறைபவருக்கு 2000 ரிங்கிட் சன்மானம் கொடுக்க முன் வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.