Home வாழ் நலம் அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்!

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்!

958
0
SHARE
Ad

geogiya_devis_003ஏப்ரல் 10 – அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது ஏற்படாது.

அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத் திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும், உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.

இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது, புத்தகங்களை படித்த பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கனிணி ht716விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து தப்ப வேண்டுமானால், மன அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.