கோலாலம்பூர், ஏப்ரல் 10 – கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி பெய்ஜிங் சென்ற மாஸ் விமானம் மாயமாய் மறைந்து போனதைத் தொடர்ந்து தீவிர தேடும் பணி நடைபெற்று வரும் வேளையில் அவ்விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அந்தவிமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து இரண்டு புதிய துடிப்பு ஒலிகள் கேட்டதாக தேடும் குழுவினருக்கு தலைமை ஏற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் ஹோவ்ஸ்டன் தெரிவித்துள்ளதால் நாம் மிகுந்துநம்பிக்கையோடு இருக்கிறோம் என ஹிஷாமுடின் தமது டுவிட்டரில் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியா தற்காப்புப் படையின் கப்பலான ஓசியன் ஷீல்டு நேற்று முன்தினம் மாலை 4.27 மற்றும் இரவு 10.17க்கு காணமல் போன எம்.எச்.370 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வந்ததாக நம்பப்படும் இரு துடிப்பு ஒலிகளை கேட்டதாக ஹேவ்ஸ்டன் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
பிரிட்டனின் இம்மார்சட் துணைக்கோளை நிறுவனம் மற்றும் பிரிட்டனின் விமான விபத்துகள் மீதான விசாரணை பிரிவுடன் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் எம்எச் 370 விமானம் ஆகக் கடைசியாக மேற்கே இந்தியப் பெருங்கடலுக்கு உயரே பறந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்தவிமானம்காணமல் போன 17 நாட்களுக்குப் பிறகு விமானம் தனது பயணத்தை இந்தியப் பெருங்கடலில் முடித்துக் கொண்டதாகமார்ச் 24ஆம் தேதியன்றுபிரதமர் நஜீப் துன் ரசாக்.