Home வாழ் நலம் செல்பேசியை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும்!

செல்பேசியை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும்!

759
0
SHARE
Ad

cellphoneஏப்ரல் 16 – செல்பேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது. அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போசிகளை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

செல்பேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடத்தப்பட்டது.cellphone belt

#TamilSchoolmychoice

மேலும், அதிகம் செல்பேசிகளால் பதிக்கபட்டவர்கள் ஆண்களே என தெரியவந்துள்ளது. இடுப்பு பெல்ட்டில் செல்போசிகளை அணிவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.