Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூரில் வர்த்தகத்தை மேம்படுத்த ஆஸ்திரேலியா ஆர்வம்!

சிங்கப்பூரில் வர்த்தகத்தை மேம்படுத்த ஆஸ்திரேலியா ஆர்வம்!

582
0
SHARE
Ad

Andrew-stonerசிங்கப்பூர், ஏப்ரல் 16 – சிங்கப்பூர் – ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆஸ்திரேலியா நியூ சௌத் வேல்ஸ் மாகாண துணைப் பிரதமர் அண்ட்ரு ஸ்டோனர் நேற்று சிங்கப்பூர் வந்தார்.

சிங்கப்பூரின் ‘கோல்ட் ஸ்டோரேஸ்’ பேரங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் நியூ சௌத் வேல்ஸ் தயாரிப்பு உணவுப் பொருட்களை தான் காண விரும்புவதாகவும், அதன் காரணமாக அப்பேரங்காடியின் மூத்த அதிகாரிகளை தான் சந்திக்கப் போவதாகவும் ஸ்டோனர் கூறினார்.

கடந்த ஒரு வருடத்தில் ஸ்டோனர் சிங்கப்பூருக்கு வருவது 2 ஆவது முறையாகும்.

#TamilSchoolmychoice

அது மட்டுமின்றி, கடந்த 2010-2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா-சிங்கப்பூர் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பேராங்காடிகளில் ஆஸ்திரேலியாவின் பானங்கள், பால் பவுடர்கள், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் எவ்வாறு விற்பனையாகின்றனது என்றும் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூருக்கும் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கு எவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியும் என்று ஆய்வு செய்கிறார். மேலும் அவர் கூறுகையில், எங்கள் நாட்டுத் தயாரிப்புகள் சுத்தமாகவும், தரமாகவும் தாங்கள் உற்பத்தி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.