Home உலகம் 476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கவிழ்ந்தது – 2 பேர் பலி!

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கவிழ்ந்தது – 2 பேர் பலி!

610
0
SHARE
Ad

southசியோல், ஏப்ரல் 16 – 476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 180 பயணிகள்  மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அக்கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

கப்பல் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

தற்போது இக்கப்பல் கடலில் கவிழந்து மூழ்கி வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் பயணம் செய்தவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றுள்ளனர்.

இக்கப்பல் 900 மக்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்தது. இருந்தாலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.