கோலாலம்பூர், ஏப்ரல் 10- புதிய மோனோ ரயில்கள் ஆகஸ்ட் முதல் சேவையில் ஈடுபடும். ஒவ்வொரு மோனோ ரயிலும் ஒரே நேரத்தில் 430 பயணிகளை ஏற்றிச் செல்ல வல்லது என்று ரொலிங் ஸ்டாக் டிப்பார்ட்மெண்ட் மற்றும் பிரசரானா இண்டகிரேட்டட் மேனேஜ்மெண்ட் முகமது இசோம் அஜின் கூறினார்.
மிகுந்த பாதுகாப்பு அம்சங்களும் பேறு குறைந்தவர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 4 புதிய மோனோ ரயில்களின் சேவை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சேவையில் ஈடுபடும்.
பாதுகாப்பு இடைப்பட்டையுடன் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் கொண்டதாக அதன் இருக்கைகள் அமைந்து இருக்கும். அத்துடன் ரசகிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதுடன் புகையை கண்டறியும் அதிநவீன கருவியையும் இந்த புதிய மோனோ ரயில்கள் கொண்டு இருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது பயனீட்டில் இருக்கும் 10 வருட உபயோகஸ்த்திலான இரண்டு மோனோ ரயில்களுக்கு பதிலாக இரண்டு மோனோ ரயில்கள் தொடக்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
விரைவில் சேவையில் ஈடுபடவிருக்கும் இரண்டு மோனோ ரயில்கள் தற்போது அதிநவீனசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதன் பிரேக்செயல்பாடு கதவு போன்றவற்றின் சோதனைக்காக பின்னிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த புதிய மோனோ ரயில்கள் சோதனையில் ஈடுபடுவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிறுகளில் கே.எல்.மோனோ ரயில் சேவை நிறுத்தப்படும் என்று முகமட்இசோம் கூறினார்.