டெல்லி, ஏப்ரல் 10 – இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரத்தை மீறிய செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்காதன் மூலம், இலங்கையுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய சாத்தியம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன எதிர்பார்க்கின்றது என்பதை இலங்கை அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டுள்ளதகாக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்தியா அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் இந்தியா மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.