Home இந்தியா மோனோ ரெயில் திட்ட பணிகள் குறித்து 23-ந்தேதி இறுதி முடிவு

மோனோ ரெயில் திட்ட பணிகள் குறித்து 23-ந்தேதி இறுதி முடிவு

530
0
SHARE
Ad

chennaiMetroRail

சென்னை, நவ.6- சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையும் (முதல் வழித்தடம்), சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் (2-வது வழித்தடம்) ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், புறநகர் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ரூ.8,050 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, சென்னையில் 4 வழித்தடங்களில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

முதற்கட்டமாக 3 வழித்தடங்களிலும், 2-வது கட்டமாக 4-வது வழித்தடத்திலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மோனோ ரெயில் திட்டத்தின் கட்டுமான பணிக்கு குறைந்த அளவு நிலமே தேவைப்படும். ஒரு சதுர மீட்டருக்கும் குறைவான அளவிலேயே சாலையின் நடுவில் தூண்கள் அமைக்கப்படும்.

எனவே, இந்த திட்டத்தை, பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் எளிதாக நிறைவேற்ற முடியும்.

இந்த மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது. சர்வதேச நிறுவனங்கள் பல இதில் கலந்துகொண்டுள்ளன.

கேமன் என்ற இந்திய கம்பெனியும், சி.ஏ.எப். என்ற ஸ்பெயின் கம்பெனியும் இணைந்து ஒரே நிறுவனமாக டெண்டர் கோர உள்ளன. இதேபோல், ஐ.எல். ஆண்ட் எப்.எஸ். என்ற இந்திய கம்பெனியும், ஸ்கோமி என்ற மலேசிய கம்பெனியும் இந்த டெண்டரில் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 நிறுவனங்களும் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் அனுபவமும், திறமையும் கொண்டது. அனேகமாக 2 நிறுவனங்களுக்கு இணைந்து மோனோ ரெயில் திட்டப்பணிகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான டெண்டர் தேதி இம்மாதம் (நவம்பர்) 23-ந்தேதி நிறைவடைகிறது.

எனவே, அன்றைய தினமே மோனோ ரெயில் திட்டப்பணிகளை யாரிடம் வழங்குவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, உடனடியாக 3 வழித்தடங்களில் மோனோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு, 2 ஆண்டு காலத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.