Home இந்தியா திருமணமாகியும் மோடி ‘பிரம்மச்சாரி’ – சகோதரர் சோம்பாய் மோடி தகவல்!

திருமணமாகியும் மோடி ‘பிரம்மச்சாரி’ – சகோதரர் சோம்பாய் மோடி தகவல்!

735
0
SHARE
Ad

downloadவதோதரா, ஏப்ரல் 11 – பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவை வதோதரா தொகுதியில் கடந்த 9-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு திருமணமாகிவிட்டது எனவும், தன்னுடைய மனைவியின் பெயர் ஜசோதாபென் என்றும் மோடி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவயதில் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட திருமணத்தால், மனைவியைவிட்டு மோடி பிரிந்ததாக அவரது சகோதரர் சோம்பாய் மோடி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, திருமணம் ஆகாத பிரம்மசாரி என்றுதான் எல்லோருமே கருதி வந்தனர். பல்வேறு பொதுக் கூட்டங்களில் மோடி பேசுகையில் கூட, ‘‘எனக்கு குடும்பம் இல்லை.

நான் தனிக்கட்டை. அதனால் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறேன்’ என்று குறிப்பிட்டார். கடந்த 2001-ல், மோடி முதல் முறை முதல்வரானார்.

அதன்பின் 3 மாதங்களுக்கு பிறகு, ராஜ்கோட் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது வேட்பு மனுவில், மனைவி பற்றி குறிப்பிடாமல் இருந்தார்.

மோடியின் திருமணம், மனைவி குறித்து பல கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் துண்டு பிரசுரங்களை வினியோகித்தது. அதன்பின், கடந்த 2012-ஆம் ஆண்டு மணிநகர் சட்டசபை தொகுதியில் மோடி போட்டியிட்ட போதும் வேட்பு மனுவில் மனைவி பெயர் குறிப்பிடவில்லை.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ‘வேட்பு மனுவில் எல்லா விவரங்களையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். முமுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’ என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி, வேட்பு மனுவில் மனைவியின் சொத்து விவரங்களையும் வேட்பு மனுவில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நேற்று முன்தினம் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.Tamil_Daily_News_59963190556 ஆனால், மனைவியின் வருமானம் பற்றியோ, பான் கார்டு பற்றியோ எந்த தகவலும் எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பெரியோர்கள் தனக்கு 17 வயதில் ஜசோதா பென்னை திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணமான 2 வாரங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாகவும் மோடி கூறியுள்ளார்.

குஜராத்தின் வட்நாகர் என்ற கிராமம்தான் மோடியின் சொந்த ஊர். அங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது பிராமண்வடா. இந்த கிராமத்தில்தான் மோடியின் மனைவி ஜசோதாபென் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், மோடியின் அண்ணன் சோம்பாய் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் முன்பு சிறுவயதிலேயே குழந்தைகளின் திருமணத்தை பெற்றோர்கள் முடிவு செய்துவிடுவார்கள்.

அதுபோன்றுதான் நரேந்திர மோடிக்கும், ஜசோதா பென்னுக்கும் சிறுவயதிலேயே, எங்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

சிறுவயதில் நடந்த இந்த கட்டாய திருமணத்தில் மோடிக்கு துளியும் விருப்பம் இல்லை. சுவாமி விவேகானந்தரின் பாடங்களின்படி, நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்று தன் உள்மனம் அடிக்கடி கூறுவதாக தெரிவித்து வந்தார். அதன் அடிப்படையில்தான் அவர் நாட்டுக்கு சேவை ஆற்ற திருமண பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றார்.
முதலில் வெளிப்படுத்திய பத்திரிகை:

நரேந்திர மோடிக்கும், ஜசோதாபென்னுக்கும் திருமணம் நடந்த விவரத்தை குஜராத்தி வார இதழான அபியான் தான் முதன் முதலில் வெளிப்படுத்தியது. ஆனால், இந்த திருமணம் குறித்து ஜசோதா பென்னும் அவரது குடும்பத்தினரும் பேச மறுத்து விட்டதாகவும், அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

இது தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என்றும், ஆனால், மோடி தன்னுடைய முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்ததாக அபியான் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோடியின் சொத்து:

வதோதரா தொகுதியில் மோடி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனக்கு ரூ.1.51 கோடி சொத்து உள்ளதாக கூறியுள்ளார். கையிருப்பு ரூ.29,700, வங்கியில் ரூ.44 லட்சம் டெபாசிட், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள், ரூ.4.34 லட்சம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்கள், ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள 4 மோதிரம் உள்ளன.

சொந்தமாக வாகனம் இல்லை. மேலும், ரூ.2.47 லட்சத்துக்கு நிலம் வாங்கியதாகவும், அதன் தற்போதை சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்றும், இவை எல்லாம் சேர்த்து ரூ.1.51 கோடிக்கு சொத்து உள்ளதாகவும் மோடி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கேள்வி:Congress-party

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு வழியாக நரேந்திர மோடி திருமணம் ஆனதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒரு பெண்ணை தவிக்கவிட்ட நபரை இந்த நாட்டின் பெண்கள் மதிக்க முடியுமா? மோடி, மனைவியை விட்டு பிரிந்தது, அவரது உரிமையை பாதிக்காதா? என்று கூறியுள்ளார்.

ஆனால், திக்விஜய் சிங்கின் கேள்விக்கு பதில் அளித்துள்ள மோடியின் சகோதரர் சோம்பாய், ‘’மோடிக்கு 50 ஆண்டுக்கு முன்பு, பெற்றோரின் கட்டாயத்தினால்தான் சிறுவயதில் திருமணம் நடந்துள்ளது. இளம்வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர விரும்பியதாலும் மனைவியைவிட்டு பிரிந்தார்’’ என்று கூறியுள்ளார்.