Home இந்தியா திமுக-வை அழிப்பார் ஸ்டாலின் – அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ரித்தீஷ் குமார் ஆவேசம்!

திமுக-வை அழிப்பார் ஸ்டாலின் – அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ரித்தீஷ் குமார் ஆவேசம்!

570
0
SHARE
Ad

Rithishசென்னை, ஏப்ரல் 11 – அ.தி.மு.க.வில் விரைவில் இணைவார் என, எதிர்பார்க்கப்பட்ட அழகிரி ஆதரவாளரான, ராமநாதபுரம் தி.மு.க. – நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ரித்தீஷ் குமார், நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அவருக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை, ஜெயலலிதா வழங்கினார். அதன்பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரித்தீஷ் கூறியதாவது,

தி.மு.க.வை அழிக்க பிறந்தவர் ஸ்டாலின். அவர் கண்டிப்பாக  தி.மு.க.வை அழிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை என, தி.மு.க. – நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ரித்தீஷ் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறியதாவது, முதல்வர் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். அ.தி.மு.க. வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் நாங்கள் உழைப்போம். அனைத்து தொகுதிகளிலும், பிரசாரம் செய்வேன். அ.தி.மு.க. ஜெயித்து ஜெயலலிதா பிரதமராவார்.

தி.மு.க., வெற்றியே பெறாது. தி.மு.க., அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. கட்சியை ஸ்டாலின் அழித்துக் கொண்டிருக்கிறார். விரைவில், கருணாநிதியே கட்சியில் இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நடிகர் ரித்தீஷ் கூறினார்.