Home இந்தியா 60 மாதங்களில் 60 ஆண்டுகள் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வேன் – மோடி!

60 மாதங்களில் 60 ஆண்டுகள் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வேன் – மோடி!

625
0
SHARE
Ad

modi2_1598726gஅரா, ஏப்ரல் 11 – அராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த 60 ஆண்டுகள் நாட்டுக்கு தலைமை தாங்குபவராக நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார்.

ஆனால் தற்போது நாட்டுக்கு தேவை நிர்வாகிகள் இல்லை.சிறந்த சேவகர்கள். நான் ஒரு சிறந்த சேவகனாக இருந்து பணியாற்றுவேன். என் மக்களையும், என் நாட்டையும் சிறந்தமுறையில் வழிநடத்துவேன் என அவர் கூறினார்.

மேலும் இத்தகைய சேவகராக பணியாற்ற தாம் தயார் என்று கூறினார். அதற்கான வாய்ப்பு தமக்கு அளிக்கப்பட்டால் நாடு 60 ஆண்டுகளாக அடைந்த பாதிப்பை 60 மாதங்களில் சரிசெய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மத்தியில் வலிமையான அரசு அமைய பீகார் மக்கள் ஆதரவு அளிக்கும்படி மோடி வேண்டுகோள் விடுத்தார்.