ஏப்ரல் 11 – புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதன் ஒரு பகுதியாக தண்ணீரில் வளரும் தாவரமான வாட்டர் கிரஸ்கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்ள மூலக்கூறு புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புற்று நோய் குறித்த ஆராளிணிச்சியில் இறங்கினர்.
முழுமையான பரிசோதனைக்குப் பின்னர் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தினமும் 80 கிராம் அளவுக்கு வாட்டர்கிரஸ்கீரை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.
இதனை உட்கொண்ட ஓரு சில மணிநேரங்களிலேயே ரத்தத்தில் புற்று நோயை எதிர்க்கும் செல்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
இந்த செல்கள் நோயாளிகளின் உடலில் உள்ள புற்று நோய்க் கிருமிகளை போராடி அழிப்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மிகச்சிறிய அளவில் தினமும் இத்தாவரத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்று நோயில் இருந்து ஓரளவு உடனடி விடுதலை கிடைக்கும் என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் தகவல். விரைவில் இதனை மருந்து வடிவில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.