Home உலகம் ஐரோப்பாவிற்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்க ரஷ்ய அதிபர் புடின் திட்டம்!

ஐரோப்பாவிற்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்க ரஷ்ய அதிபர் புடின் திட்டம்!

487
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_85396540165ரஷ்யா, ஏப்ரல் 11 – கிரிமியா மாகாணத்தின் பிரிவு, கிழக்குப்பகுதியில் வசிக்கும் ரஷ்ய ஆதரவாளர்களின் போராட்டம் என பல உள்நாட்டுக் பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் உக்ரைன் அரசுக்கு, நிலுவையில் உள்ள எரிவாயு கடன்களை திருப்பி செலுத்துதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளார்.

இம்முறை உக்ரைனுக்கு மட்டும் அல்லாமல் ஐரோப்பாவிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புடினின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெச்கோவ் கூறுகையில்,

உக்ரைன் அரசு, மாஸ்கோவிற்கு செலுத்தவேண்டிய எரிவாயு கடன்கள் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இதனால் உக்ரைனுடனான எரிவாயு வர்த்தம் பாதிக்கப்படலாம். இந்த பாதிப்பு ஐரோப்பாவிலும் எதிரொலிக்கும்” என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கிரிமியா இணைப்பு விவகாரத்தில் ஐரோப்பா, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவதால், அதனை பொருளாதார ரீதியா வலுவிழக்கச் செய்ய, ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், ஐரோப்பா, எரிவாயுவில் பெரும் பகுதியை உக்ரைன் மூலமாக ரஷ்யாவிடமிருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.