Home உலகம் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!

914
0
SHARE
Ad

gun-fire--Thevain.-appan,-gobiகொழும்பு, ஏப்ரல் 12 – இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள், சமீபகாலங்களாக  கோபி என்பவரின் தலைமையில் மீண்டும் உயிர்பெற்றுவருவதாக இலங்கை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த கோபி உட்பட மூவர் வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்த கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீவன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்தினம் நவநீதன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரான தேவியான் (வயது 36) ஆகியோர்,

#TamilSchoolmychoice

வவுனியாவின் நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்து வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு இராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் சுற்றிவளைக்கப்பட்ட மூவரும் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போது மூவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி தெரிவித்துள்ளார்.

இதே வேளையில் சில ஊடகங்களில் விடுதலைப் புலிகளுடனான இந்த சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 65 tamil-indoவிடுதலைப்புலிகளை கைது செய்திருக்கிறது இலங்கை அரசு.

இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கும் தடை விதித்திருக்கிறது.

அந்த தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசின் காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோகனா கொழும்பு நகரில் செய்தித்தார். அப்போது அவர், ”இலங்கையில் கடந்த மாதம் விடுதலைப்புலிகள் 65 பேரை நாங்கள் கைது செய்து உள்ளோம்.

இவர்களில் 10 பேர் பெண்கள் ஆவார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியிலும், நிதிதிரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என அஜித் ரோகனா கூறினார்.