Home India Elections 2014 முலாயம் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ், பா.ஜ.க. வலியுறுத்தல்!

முலாயம் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ், பா.ஜ.க. வலியுறுத்தல்!

649
0
SHARE
Ad

untitledபுதுடெல்லி, ஏப்ரல் 12 – பாலியல் பலாத்காரம் குறித்து தான் கூறிய கருத்துக்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், இளைஞர்கள் இளம் வயதில் தவறு செய்வது இயற்கைதான்.

அவர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக, தூக்கு தண்டனை விதிப்பது சரியல்ல என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மீம் அப்சல் கூறியதாவது,

முலாயம் சிங் போன்ற மூத்த தலைவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்தது ஆட்சேபகரமானது மட்டுமின்றி, வெட்கப்பட வேண்டியதும் கூட. இதன் மூலம் பெண்கள் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அவர் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்பதும், அவரது கருத்து வெளிப்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், அவர் மன்னிப்பும் கோர வேண்டும் என மீம் அப்சல் கூறினார்.

பாஜ தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், 

“மிக வெட்கப்பட வேண்டிய கருத்து இது. இதற்காக முலாயம் மன்னிப்பு கோர வேண்டியது அவசியம். சீரிய பிரச்சனையில், முலாயம்4034a729-ee1f-4bb4-b5a3-e927fca7eb62_S_secvpf அரசியலை கையாளுகிறார்’’ என்றார்.

மற்றொரு பாஜக தலைவரும், அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருமான ஸ்மிருதி இரானி கூறுகையில்,

மத்தியில் என்ன விலை கொடுத்தாலும் முலாயம் சிங்கால் ஆட்சியை அமைக்க முடியாது. அதனால், சட்ட திருத்தங்கள் மூலம் இதுபோன்ற பலாத்கார பேர்வழிகளுக்கு அவர் உதவி செய்ய நினைத்தாலும் முடியாது. ஏனெனில், காங்கிரசே எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகிவிட்டது என்றார்.

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து கீழே வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண் ‘நிர்பயாவின்’ பெற்றோரும், முலாயமுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘முலாயம் கூறிய கருத்துக்களை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற ஒரு கருத்து பலாத்கார பேர்வழிகளின் தைரியத்தை அதிகரித்து விடும். வருங்காலத்தில் பலாத்கார வழக்குகள் உயர்ந்தால், அதற்கு அவர் மட்டும்தான் காரணமாக இருப்பார் என்றானர்.